ஜக்காத்

ஜக்காத் மற்றும் சதக்காவை கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளைக்கு அளித்து உதவிடுவீர்!

 

அன்பு உள்ளம் கொண்டவர்களே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

இந்த வரிகள் தங்களை பூரண உடல் நலத்துடனும் பரிசுத்த ஈமானுடனும் சந்திக்கட்டுமாக ஆமீன்.

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் 2010ஆம்   வருடம் ஜூன் மாதம் வெறும் குழுவாக நமது அறக்கட்டளை இயங்கி. பின் July 15, 2014- ஆம் ஜூலை மாதம் 15 தேதி முதல் (கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளை) பெயரில் இயங்கிவருகின்றது.

நமது கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளை கல்வியில் பின்தங்கியுள்ள இஸ்லாமிய மற்றும் ஏனைய சமுதாய மக்களை  ஏழ்மை நிலையால் கல்வியை தொடர முடியாத நிலையிலுள்ள ஏழை   மாணவர்களுக்கு கல்வியின்  அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி   அவர்களை கல்வி கற்க தூண்டுவதும்  அதற்கு உதவுவதும், நலிவடைந்தவர்களுக்கு   மருத்துவ சிகிச்சைக்கு  முடிந்தளவு பொருளாதார உதவிகள் செய்வதும், கடன் காரமாக தொழில் நலிவடைந்தவர்களையும், புதிதாக தொழில் துவங்க முடியாதவர்களுக்கும் நமது (E I T R TRUST) அறக்கட்டளை  அல்லாவின் கிருபையால் சமுதாய பணிகளை அதிக அளவு செய்துகொண்டு வருகின்றது..

எந்த ஒரு அரசியல்   கட்சியையோ எந்த ஒரு சமுதாய  அமைப்பையோ அல்லது தமிழகத்தில் இயங்கி வரும்   எந்த ஒரு கொள்கை அமைப்பையும் அந்த  அமைப்புகளின் கொள்கைகளையும் சாராத ஒரு   அமைப்பாகும். (E I T R TRUST) அறக்கட்டளை பணிகளை அங்கீகரித்து, மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பிற உதவிக்களுக்காக நமது (E I T R TRUST) அறக்கட்டளை பெயர் மக்கள் மனதில் தெரிகிறது. அதனை பூர்த்தி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

மேலும் நம்மை நோக்கி நோன்பு வெகு வேகமாக வந்துகொண்டிருக்கிறது, நீங்களும் உங்களை உங்களுடைய சந்தா மற்றும் ஜக்காத் தொகையை தயவு செய்து (E I T R TRUST) அறக்கட்டளை கொடுத்து ((E I T R TRUST) அறக்கட்டளை வங்கி விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அல்லாஹ்வின் பொருட்டு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள். அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

நீங்கள் கொடுத்து உதவிடும் ஜக்காத் மற்றும் சதக்கா பொருட்டு, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் அல்லாஹ் கருணையை இறக்கி, மேலும் பரகத் செய்வானாக! ஆமின்!!