zakat & sadaqah

இந்த ரமளானில் உங்கள் ஜக்காத் மற்றும் சதக்காவை நமது அறக்கட்டளைக்கு வாரி வழங்கிடுவீர்!

அன்புள்ளம் கொண்டவர்களே! அஸ்ஸலாமு அழைக்கும்,

இந்த வரிகளின் வாயிலாக உங்களை  சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளை, ஆரம்பித்த 2009-ஆம் ஆண்டு முதல் இன்று வரை 1-ஆம் வகுப்பு முதல் முதுகலைப்பட்டம் வரை உள்ள     மாணவர்களுக்கு குறிப்பாக கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு,  கல்வியின் அவசியத்தை குறித்து எடுத்துரைத்து, அவர்கள் கல்வியை தொடர முடியாத காரணத்தை கண்டறிந்து, அவர்களுக்கான கல்வி கிடைக்க செய்துவருகின்றோம், மேலும் நமது கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளையின் உதவியில் இயங்கும் மெட்ராஸ் மெக்கானிக்கல் இன்ஸ்டிடியூட் ஆரம்பித்த 2013-ஆம் ஆண்டு முதல் பெற்றோர்  இல்லாத மாணவர்களுக்கு இலவசமாக தொழில் கல்வி பயிற்சி அளித்து வருகின்றோம். குறிப்பாக   இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் பயிற்சியினை சிறந்த பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் 1000-த்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்துள்ளோம், 2018-2019-ஆம்  ஆண்டு வரை 50-க்கு மேற்பட்ட மாணவர்கள் புதிய இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்கள், மேலும் 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் Hero, Honda, Bajaj, TVS , போன்ற நிறுவனங்களில் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றார்கள்.

Slider

Send Money order / Demand draft

EDUCATION AND INDUSTRIAL TRAINING REVOLUTION TRUST

No.56/71 Arunachalam Street, Chinthadripet, Chennai-600002

................................................................................................................

Our Trust Account Details You Can Donate By NEFT.


Account Name : EITR TRUST
Account Number : 50200013974363
Bank Name : HDFC USMAN ROAD Branch
IFSC CODE : HDFC 0002590

For More Details Click here!!

இந்த முயற்சியிலும் வெற்றியிலும் எங்களுடன் தோள்நின்ற ஆதரவாளர்களாகவும், நன்கொடையாளர்களாகவும் உதவிய அனைவருக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியை அளிப்பானாக ஆமீன்.

இந்த தொழில் கல்வி என்பது மிகப்பெரும் சொத்து, அதனை சரியான நபர்களிடம் சேர்க்கவேண்டும் என்பற்காக  கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளை தீர்மானித்துள்ளது, ஆதரவு இல்லாதவர்களுக்கும், சொந்தம் இல்லாதவர்களுக்கும், வறியவர்களுக்கும் இந்த தொழில் கல்வி சென்றடையும் பொழுது அவர்களும் பயனடைவார்கள், அவர்களால் அவர்களை போன்ற மக்களும்  பயனடைவார்கள், (அவர்கள் ஜகாத் கொடுக்கும் அளவுக்கு உயர்வார்கள் இன்ஷாஅல்லாஹ்) இதன் மூலம் நிரந்தர நன்மையை, நீங்களும், நாங்களும் அடையலாம். இதுவரை கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளைக்கு  அளித்து வந்த நிதியையும், ஆதரவையும், பிரார்தனைகளையும், அதிகம் அதிகம் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 

அல்லாஹ் நமது நற்செயல்களை ஏற்றுக்கொள்வானாக!

ஆமீன்!!!

 

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் 2010ஆம்   வருடம் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டு  பின் July 15, 2014- ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 15 தேதி முதல் கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளை (EITR TRUST ) என்ற பெயரில் இயங்கிவருகின்றது.

(EITR TRUST) கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளை அல்லாவின் கிருபையால் ஏழ்மை நிலையால் கல்வியை தொடர முடியாத நிலையிலுள்ள இஸ்லாமிய  மக்களை  ஏழை   மாணவர்களை கல்வியின்  அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி   அவர்களை கல்வி கற்க தூண்டுவதும்  அதற்கு உதவுவதும், நலிவடைந்தவர்களுக்கு   மருத்துவ சிகிச்சைக்கு  பொருளாதார உதவிகள் செய்வதும், கடன் காரனமாக தொழில் நலிவடைந்தவர்களுக்கு உதவுவதும், கைத்தொழில் கற்றுத்தந்து  புதிதாக தொழில் துவங்க ஊக்குவிப்பதும், கணவனை இழந்த விதவை இஸ்லாமிய பெண்களுக்கு அவர்கள் சுயமாக தொழில் செய்திட உதவுவதுமே  (E I T R TRUST) அறக்கட்டளை  சமுதாய பணிகளை அதிக அளவு செய்து வருகின்றது.

இஸ்லாமிய கடமை . ஜக்காத்

ஜக்காத் என்ற அரபிச் சொல்லுக்கு தூய்மைப் படுத்துதல் என்ற பொருளாகும்..
ஒரு முஸ்லிம் தன்னுடைய வருமானத்தில் செலவு போக எஞ்சி இருப்பதில் நூற்றுக்கு இரண்டரை சதவீதம் பிறருக்கு வழங்குவதே ஜக்காத் ஆகும்..
ஜக்காத் தொகையை சில்லரை சில்லரையாக பலருக்கு கொடுக்காமல் சிலருடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுவது சிறப்பு..
ஜக்காத் கொடுப்பதன் மூலமாகவே ஒரு முஸ்லிம் தன்னுடைய பொருளாதாரத்தை சுத்தப் படுத்திக் கொள்கிறான் ....

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “ஏழுவகை மனிதர்கள் மறுமையில் அல்லாஹ்வின் நிழலில் இருப்பார்கள் அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தன் வலக்கரம் செலவழித்ததை இடக்கரம் அறியாத முறையில் செய்தாரோ அவருமாவார்  (புகாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: “நிச்சயமாக ஸதகா அல்லாஹ்வின் கோபத்தை அணைத்துவிடுகிறது. (உங்களுக்கு) துர்மரணம் ஏற்படுவதைத் தடுக்கிறது (நூல் : திர்மிதீ)

சேவைகள்:
பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு இலவச முழு கல்வி.
16 வகையான தொழில் பயிற்சி,
தொழில் துவங்க உதவி,
விதவை தொழில் உதவி,
கல்விக்கான உதவிகள்:
பெற்றோர் இல்லாத மற்றும் நலிவடைந்த பெற்றோருக்கான குழந்தைகளை  கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளித்து வருகின்றது. (வகுப்பு கட்டணம், சீருடைகள், புத்தகங்கள்) இன்னும் பல...
மேலும் இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் பின்தங்கியுள்ள நிலைமையை கணக்கில் கொண்டு  தகுதிவாய்ந்த நபர்களை நேர்முக தேர்வில் தேர்வு செய்து  உயர்கல்வி (UG,PG) சீருடை பணியாளர்கள் (Police), மற்றும் மத்திய, மாநில அரசு TNPSC, Railway Etc.. பணியிடங்களுக்கு இஸ்லாமிய மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு கல்வி அளித்து வருகின்றது.
தொழில் பயிற்சி:
(EITR TRUST )  அறக்கட்டளையின் அங்கமான மெட்ராஸ் மெக்கானிக்கல் இன்ஸ்டிடியூட்-ன் மூலமாக பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சி அளித்து தொழில் முனைவோர்களாக மாற்றி சமூகத்தில்  அவர்களுக்கு சிறந்த அங்கிகாரம் கிடைக்க வழிவகை செய்கின்றது.
விதவை தொழில் உதவி
கணவன் இருந்தும் இல்லாமலும் தவிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேன்மைப்படுத்த தையல் பயிற்சி, குடிசை தொழில்கள் போன்ற பயிற்சிகளை  இலவசமாக அளித்து வருகின்றது. இன்னும்  எண்ணற்ற உதவிகளை (EITR TRUST ) அறக்கட்டளை  செய்து வருகின்றது.
.நீங்கள் கொடுத்து உதவிடும் ஜக்காத் மற்றும் சதக்கா பொருட்டு, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் அல்லாஹ் கருணையை இறக்கி, மேலும் பரகத் செய்வானாக! ஆமின்!!
(EITR TRUST ) அறக்கட்டளை இந்த சேவைகளை இன்னும் அதிக அளவில் செய்திட இந்த புனிதமிகு ரமலானில் உங்கள் ஜகாத் மற்றும் சதக்காவை (EITR TRUST ) கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளைக்கு அளித்து நீங்களும் இந்த சேவையில் பங்கேற்கும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.
(E I T R TRUST) அறக்கட்டளை வங்கி விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அல்லாஹ்வின் பொருட்டு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள். அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்!!!

அன்புடன்

அ.அபூபக்கர் சித்திக்
நிறுவனர் மற்றும் தலைவர்