Road Accident Awareness And Mechanical Training Camp on D.B Jain Collage
கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகதிரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக 15 முதல் 23 வயதிலான மாணவர்கள் தான் அதிக அளவில் உயிர் இழக்கின்றனர் என்று
மத்திய, மாநில அரசாங்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
.
இதை கருத்தில் கொண்டு "கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளை" மற்றும் "மெட்ராஸ் மெக்கானிக்கல் இன்ஸ்டிடியூட்" இணைந்து மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச சிறப்பு சாலை விபத்து விழிப்புணர்வு மற்றும் இருசக்கர வாகனங்களை எப்படி கையாளுவது என்ற பயிற்சி முகாம் நடத்தி வருகின்றது.
.
இதன் ஒரு பகுதியாக 11-10-17 அன்று D.B. ஜெயின் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. சுமார் 200-க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இப்பயிற்சியில் பங்கு பெற்று பயனடைந்தனர்.
.
மாணவர்களுக்கான இந்த வகுப்புகள் சிறப்பாக இருந்ததாகவும் , மாணவர்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்று வெகுவாக கல்லூரியின் முதல்வர் Nss அதிகாரி கோதண்டராமன் அவர்கள் பாராட்டினார்கள் . மேலும் D.B. ஜெயின் கல்லூரின் சார்பாக "கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளையின் சார்பாக அபூபக்கர் சித்திக் அவர்களிடம். "விருது கேடயம்" மற்றும் நன்றி சான்றிதழ்களும் வழங்கினார்கள்.