ரமலான்

இந்த ரமளானில் உங்கள் ஜக்காத் மற்றும் சதக்காவை நமது அறக்கட்டளைக்கு வாரி வழங்கிடுவீர்!

அன்பு உள்ளம் கொண்டவர்களே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

இந்த வரிகள் தங்களை பூரண உடல் நலத்துடனும் பரிசுத்த ஈமானுடனும் சந்திக்கட்டுமாக ஆமீன்.

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் 2010ஆம்   வருடம் ஜூன் மாதம் வெறும் குழுவாக நமது அறக்கட்டளை இயங்கி பின் July 15, 2014- ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 15 தேதி முதல் (கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளை) என்ற பெயரில் இயங்கிவருகின்றது.

நமது கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளை அல்லாவின் கிருபையால் ஏழ்மை நிலையால் கல்வியை தொடர முடியாத நிலையிலுள்ள இஸ்லாமிய  மக்களை  ஏழை   மாணவர்களை கல்வியின்  அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி   அவர்களை கல்வி கற்க தூண்டுவதும்  அதற்கு உதவுவதும், நலிவடைந்தவர்களுக்கு   மருத்துவ சிகிச்சைக்கு  பொருளாதார உதவிகள் செய்வதும், கடன் காரனமாக தொழில் நலிவடைந்தவர்களுக்கு உதவுவதும், கைத்தொழில் கற்றுத்தந்து  புதிதாக தொழில் துவங்க ஊக்குவிப்பதும், கணவனை இழந்த விதவை இஸ்லாமிய பெண்களுக்கு அவர்கள் சுயமாக தொழில் செய்திட உதவுவதுமே  நமது (E I T R TRUST) அறக்கட்டளை  சமுதாய பணிகளை அதிக அளவு செய்து வருகின்றது.

இஸ்லாமிய கடமை . ஜக்காத்

ஜக்காத் என்ற அரபிச் சொல்லுக்கு தூய்மைப் படுத்துதல் என்ற பொருளாகும்..
ஒரு முஸ்லிம் தன்னுடைய வருமானத்தில் செலவு போக எஞ்சி இருப்பதில் நூற்றுக்கு இரண்டரை சதவீதம் பிறருக்கு வழங்குவதே ஜக்காத் ஆகும்..
ஜக்காத் தொகையை சில்லரை சில்லரையாக பலருக்கு கொடுக்காமல் சிலருடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுவது சிறப்பு..
ஜக்காத் கொடுப்பதன் மூலமாகவே ஒரு முஸ்லிம் தன்னுடைய பொருளாதாரத்தை சுத்தப் படுத்திக் கொள்கிறான் ....

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “ஏழுவகை மனிதர்கள் மறுமையில் அல்லாஹ்வின் நிழலில் இருப்பார்கள் அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தன் வலக்கரம் செலவழித்ததை இடக்கரம் அறியாத முறையில் செய்தாரோ அவருமாவார்  (புகாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: “நிச்சயமாக ஸதகா அல்லாஹ்வின் கோபத்தை அணைத்துவிடுகிறது. (உங்களுக்கு) துர்மரணம் ஏற்படுவதைத் தடுக்கிறது (நூல் : திர்மிதீ)

Send Money order / Demand draft

EDUCATION AND INDUSTRIAL TRAINING REVOLUTION TRUST

No.56/71 Arunachalam Street, Chinthadripet, Chennai-600002

................................................................................................................

Our Trust Account Details You Can Donate By NEFT.


Account Name : EITR TRUST
Account Number : 50200013974363
Bank Name : HDFC USMAN ROAD Branch
IFSC CODE : HDFC 0002590

For More Details Click here!!

சேவைகள்:

  1. பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு இலவச முழு கல்வி.
  2. 16 வகையான தொழில் பயிற்சி
  3. தொழில் துவங்க உதவி
  4. விதவை தொழில் உதவி

கல்விக்கான உதவிகள்:

பெற்றோர் இல்லாத மற்றும் நலிவடைந்த பெற்றோருக்கான குழந்தைகளை  கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளித்து வருகின்றது. (வகுப்பு கட்டணம், சீருடைகள், புத்தகங்கள்) இன்னும் பல...

மேலும் இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் பின்தங்கியுள்ள நிலைமையை கணக்கில் கொண்டு  தகுதிவாய்ந்த நபர்களை நேர்முக தேர்வில் தேர்வு செய்து  உயர்கல்வி (UG,PG) சீருடை பணியாளர்கள் (Police), மற்றும் மத்திய, மாநில அரசு TNPSC, Railway Etc.. பணியிடங்களுக்கு இஸ்லாமிய மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு கல்வி அளித்து வருகின்றது.

தொழில் பயிற்சி.

நமது அறக்கட்டளையின் அங்கமான மெட்ராஸ் மெக்கானிகல் இன்ஸ்டிடியூட்-ன் முலமாக பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு இலவசமாக தொழில் பயிற்சி அளித்து தொழில் முனைவோர்களாக மாற்றி சமுகத்தில் அவர்களுக்கு சிறந்த அங்கிகாரம் கிடைக்க வழிவகை செய்கின்றது.

விதவை தொழில் உதவி

கணவன் இருந்தும் இல்லாமலும் தவிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேன்மைப்படுத்த தையல் பயிற்சி, குடிசை தொழில்கள் போன்ற பயிற்சிகள் இலவசமாக அளித்து உதவிவருகின்றது. என்று எண்ணற்ற உதவி நமது அறக்கட்டளை செய்து வருகின்றது.

.நீங்கள் கொடுத்து உதவிடும் ஜக்காத் மற்றும் சதக்கா பொருட்டு, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் அல்லாஹ் கருணையை இறக்கி, மேலும் பரகத் செய்வானாக! ஆமின்!!

நமது அறக்கட்டளை இந்த சேவைகளை இன்னும் அதிகஅளவில் செய்திட இந்த புனிதமிகு ரமலானில் உங்கள் ஜகாத் மற்றும் சதக்காவை நமது கல்வி மற்றும் தொழில் பயிற்சி புரட்சி அறக்கட்டளைக்கு அளித்து நீங்களும் இந்த சேவையில் பங்கேற்கும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.

(E I T R TRUST) அறக்கட்டளை வங்கி விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அல்லாஹ்வின் பொருட்டு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள். அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக

அன்புடன்

அபூபக்கர் சித்திக்